ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே |

'அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல்' படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தின் வீடியோ ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்பு பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில், 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார் பிரபாஸ்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அது ஷாரூக்கானின் ரசிகர்களை கோப்படுத்தியது. அவர்தான் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார் என அவர்கள் குறிப்பிட்டார்கள். ஷாரூக் செய்த சாதனையில் 10 சதவீதம் கூட பிரபாஸ் செய்யவில்லை என்றார்கள்.
அதே சமயம் பிரபாஸ் ரசிகர்கள், 'பாகுபலி 2, கல்கி 2898 ஏடி' ஆகிய இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்தவர் பிரபாஸ். 'பாகுபலி 1' படம் மூலம் பான் இந்தியா என்ற அந்தஸ்தை உருவாக்கியவர். ஹிந்தி அல்லாத மொழியிலிருந்து வந்து சாதனை படைப்பதுதான் பெரியது என்றும் சொன்னார்கள். பிரபாஸ் பான் இந்தியா அளவில் வளர்ந்தது ஹிந்தி ஹீரோக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியது என்றும் கிண்டலடித்துள்ளார்கள். அடுத்தடுத்து சில பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ் என்றும் பாராட்டியுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் இப்படியான ஒரு விவாதத்தை கிளப்பி படத்தைப் பற்றி இன்னும் பரபரப்பாக்க வேண்டும் என்ற 'ஸ்பிரிட்' குழுவினரின் திட்டம் எளிதில் நிறைவேறிவிட்டது என்றும் இது குறித்து பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.