அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் நடித்த பைசன் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி இப்படம் வந்தது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இப்படம் நேற்றோடு 25 நாட்களை கடந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் மணத்தி கணேசனை கவுரவித்து அவருக்கு தங்க செயினும் பரிசாக வழங்கப்பட்டது. படக்குழுவினருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கடைசியாக படக்குழு பைசன் படம் 55 கோடி வசூலை எட்டியதாக போஸ்டர் வெளியிட்டது. அதன்பின்னர் வசூலை தெரிவிக்கவில்லை. தற்போதைய சூழலில் படம் 60 கோடிக்கு அதிகமான வசூலை பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் படம் லாபம், அனைத்து தரப்பும் மகிழ்ச்சி. இயக்குனர், ஹீரோ உட்பட பலர் அடுத்த படக்குழுவில் பிஸி ஆகிவிட்டனர். ஆக, பைசன் சந்தேகமின்றி வெற்றி படம்தான். பைசனுக்கு பின் இயக்குனர் மாரிசெல்வராஜ், ஹீரோ துருவ், ஹீரோயின்கள், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோரின் சம்பளமும் உயர்ந்துள்ளதாம்.




