''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் புதுமுகங்களான சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன், ஜெனிலியா ஆகியோர் நடிக்க 2003ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் 'பாய்ஸ்'.
படத்தின் நாயகியான ஜெனிலியாவைக் காதலிக்க ஐந்து நண்பர்களான சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் போட்டி போடுவதுதான் படத்தின் கதை. அந்தப் போட்டியில் சித்தார்த் வெற்றி பெற, அவருக்கும் ஜெனிலியாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பின் அவர்களுக்குள் மோதல், பிரிவு, நண்பர்களின் இசைக்குழு, ஏமாற்றம் என ஒரு சுற்று சுற்றி படம் முடியும்.
ஆபாசம், அருவெறுப்பு என சுஜாதாவின் இரட்டை அர்த்த வசனங்கள் இடைவேளை வரை வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. படத்திற்குக் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தன. இப்படி ஒரு படத்தை ஷங்கர் எப்படி இயக்கினார் என்று கேள்விகள் எழுந்தன. ஏஆர் ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டானாலும், ஒரு ஐயப்பன் பாடலுக்கு அவர் இசையமைக்க மறுத்ததும் அப்போது சர்ச்சையானது.
அப்படத்தில் நடித்தவர்களில் தமன் தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். சித்தார்த், பரத் இருவரும் பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நகுல் டிவி ஷோக்களில் நடுவராகப் போய்விட்டார். மணிகண்டன் ஆளையே காணவில்லை. ஜெனிலியா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ஒரு வெற்றிகரமான ரவுண்டு வந்து பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைக் காதலித்து மணமுடித்து, இரண்டு மகன்களுக்கு அம்மாவாகி, சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
வெளிவந்த போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பாய்ஸ்' படத்தை டிவியில் முதல் முறை ஒளிபரப்பிய போது ஆபாசக் காட்சிகள், வசனங்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு ஒளிபரப்பினார்கள். தியேட்டர்களில் பார்த்தவர்கள், டிவியில் படத்தைப் பார்த்த போது, இப்படி சொல்லியிருக்க வேண்டிய படத்தை எப்படியெல்லாம் சொல்லியிருந்தார் ஷங்கர் என ஆச்சரியப்பட்டார்கள்.
ஷங்கர் இயக்கிய படங்களில் தரமற்ற ஒரு படமாக அமைந்து அவரது இமேஜை மிகவும் இறக்கிவிட்ட படமாக 'பாய்ஸ்' படம் அமைந்தது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் அது ஷங்கருக்கு 'பாய்ஸ்' மூலமாக நடந்தது.