மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஏற்கனவே திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதில் சர்ச் ஒன்றில் மோகன்லால், மீனா உள்ளிட்ட குடும்பத்தினர் வழிபடுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்கு அந்த பகுதி மக்கள் திரளாக கூடினார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த லீலா மணியம்மா என்கிற 80 வயது மூதாட்டி மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லாலின் தீவிர ரசிகையான லீலா மணியம்மா அவரது படம் ஒன்று கூட விடாமல் தியேட்டருக்கே சென்று பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
மோகன்லாலின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர், உள்ளே செல்ல முடியாமல் வெகு நேரம் காத்துக் கிடந்தார். படக்குழுவினரிடம் மோகன்லாலை சந்தித்து விட்டு தான், நான் இங்கிருந்து கிளம்புவேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் படப்பிடிப்பு பிசியில் உரிய நேரத்தில் அந்த தகவல் அவருக்கு சொல்லப்படவில்லை. பின்னர் இந்த தகவலை கேள்விப்பட்ட மோகன்லால், மாலை 5 மணி அளவில் உடனடியாக அந்த மூதாட்டியை அழித்து வர செய்து நலம் விசாரித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




