மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

மலையாள திரை உலகில் நடிகர் குஞ்சாக்கோ போபனை போன்றே உருவத் தோற்றம் கொண்ட மேடை கலைஞர் சுனில்ராஜ் என்பவர் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் குஞ்சாக்கோ போபன் போலவே நடிக்கிறீர்களே, இதனால் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் எதார்த்தமாக, “இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. நடிகர் குஞ்சாக்கோ போபன் சுரேஷிண்டேயும் சுமலதாயிண்டேயும் ஹிருதயஹரியாய பிரணயகதா என்கிற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தின் படிப்பில் சில சமயம் கலந்து கொள்ள முடியாதபடி அமெரிக்காவில் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பதிலாக என்னை வைத்து தான் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கூறினார்.
நெட்டிசன்கள் பலரும் இந்த பேட்டியை பார்த்துவிட்டு குஞ்சாக்கோ போபனை தொழில் பக்தி இல்லாதவர் என்பது போன்று கடும் விமர்சனங்களை தெரிவிக்க துவங்கினர். தான் சொன்ன விஷயம் இப்படி ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதை கவனித்த சுனில்ராஜ் உடனடியாக, 'குஞ்சாக்கோ போபன் தான், தன்னால் அமெரிக்காவிலிருந்து வரமுடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சில காட்சிகளில் என்னை வைத்து படமாக்கும்படி சிபாரிசு செய்தார். இதில் அவர் செய்த தவறு எதுவும் இல்லை” என்று சமாளிப்பாக ஒரு விளக்கத்தை கூறியுள்ளார்.




