ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' |

கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்க என ரஜினியின் புதிய படம் பற்றி அறிவிப்பை கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டார்கள். ஆனால், அடுத்த சில தினங்களில் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி ஒரு அறிக்கையை வெளியிட்டார். தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்பே சுந்தர் சி அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது ஹீரோ ரஜினிகாந்திற்குக் கதை பிடித்தால் மட்டுமே அது படமாகும் என்று கமல்ஹாசன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்ற பரபரப்பு எழுந்தது. சில பல இயக்குனர்களின் பெயர்கள் வெளிவந்தது. ‛மகாராஜா' பட இயக்குனர் நித்திலன், ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாகவும் தகவல் வந்தது. தற்போது அந்த வரிசையில் 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெயரும் இணைந்துள்ளது. அவர் சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும் அதற்கான திரைக்கதை எழுதும் பணிகளில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முழு திரைக்கதை முடிந்து திருப்தி ஏற்பட்டால் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் நிரந்தரமில்லை.




