டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

'அருவி, வாழ்' போன்ற படங்களை இயக்கியவர் அருண் பிரபு. அதையடுத்து விஜய் ஆண்டனியின் 25வது படமான 'சக்தி திருமகன்' படத்தை இயக்கினார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வந்த இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தில் பணக்காரர்களிடமிருந்து பணத்தை திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இந்த படம் ஏற்கனவே இயக்குனர் ஷங்கர், அர்ஜுன் நடிப்பில் இயக்கிய முதல் படமான 'ஜென்டில்மேன்' கதை பாணியில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ஷங்கர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ''சக்தி திருமகன் படத்தை ஓடிடியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் அருண் பிரபு எழுப்பி உள்ள கேள்விகள் நியாயமானதாக உள்ளது. இது சிந்தனையை தூண்டும் படம். இந்த படத்தில் பல பிரச்னைகள் குறித்து விவாதித்து இருக்கிறார். அதோடு எதிர்பாராத விதத்தில் கதைக்களம் தீவிரமடைந்து கொண்டே இருக்கிறது. இயக்குனர் அருண் பிரபுக்கு ஹாட்ஸ் ஆப். விஜய் ஆண்டனி மற்றும் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்'' என்று தனது பாராட்டுகளை பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.