ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இயக்குனரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான 'ஹாட்ஸ்பாட்' வெற்றிபெற்றது. இப்போது அவர் 'ஹாட் ஸ்பாட் 2மச்' என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் பிரியா பவானி சங்கர் கதை நாயகியாக நடிக்கிறார். எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா சகா, ஆதித்யா பாஸ்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள். சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ''ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் ஆந்தாலஜி படமாக நான்கு கதைகள் இடம் பிடித்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒரு இயக்ககுனர், தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல் இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால் இதில் மூன்று வெவ்வேறான கதைகளை எதிர்பாராத மற்றும் சுவாரசியமான திருப்பங்களுடன் விவரித்திருக்கிறோம்.
இந்த திரைப்படத்திலும் இயக்குனராக நடித்திருக்கிறேன். ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் அனைவரும் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. படத்தை விஷ்ணு விஷாலின், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு பாராட்டிய விஷ்ணு விஷால், இரண்டாம் பாகத்தின் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு அதைவிட சிறப்பாக இருக்கிறது என்றும், இதனை எங்களுடைய நிறுவனம் வழங்கும்' என்றுக்கூறி வெளியிடுகிறார்'' இவ்வாறு விக்னேஷ் கார்த்திக் கூறினார்.