கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணி உள்ளிட்ட பிற பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
2026ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகிறது. கடந்த வாரத்தில் 'அடி அலையே' என்கிற முதல் பாடலை வெளியிட்டனர். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு 100வது படம் என்பதால் ரொம்பவே ஸ்பெஷலாக பணியாற்றி வருகிறார். இப்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.
முன்னதாக யுவன் சங்கர் ராஜாவின் 100வது படமான ‛பிரியாணி'-யில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடினார். இப்போது அதேபாணியில் ஜிவியின் 100வது படமான இதில் யுவன் பாடி உள்ளார்.