சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பல படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இந்த நிலையில் தற்போது அவர் திட்டம் இரண்டு என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி, திரிஷா நடித்து வெளியான 96 படத்தில் நடித்த கவுரி கிஷான் நாயகியாக நடிக்கிறார்.
வித்தியாசமான டைம் டிராவல் காதல் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு அப்துல் வகாப் என்பவர் இசையமைக்கிறார். இப்படம் தவிர ட்ராப் சிட்டி, இடி முழக்கம், 13 போன்ற படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், வாத்தி, மார்க் ஆண்டனி, ருத்ரன், சர்தார், கேப்டன் பில்லர், வாடிவாசல் உள்பட பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.