தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி |

பாலிவுடில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷஹிலா சத்தா. 1980களில் ஷாருக்கான், சல்மான்கான், கோவிந்தா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இவர் தமிழில் உருவான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இதில் அவருடன் சுரேஷ், செந்தில், நிழல்கள் ரவி, சாருஹாசன், டெல்லி கணேஷ், டிஸ்கோ சாந்தி, காஞ்சனா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் நடித்தனர்.
கன்னட இயக்குனர் துவாரகேஷ் இயக்கினார். ஹாலிவுட் உருவான 'குயின் ஆப் ஜங்கிள்' படத்தின் தாக்கத்தில் உருவான படம் இது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் வசிக்கும் மக்களுக்கு மருத்துவம் செய்ய செல்லும் ஒரு குடும்பத்தினரை கொலை செய்த விட அவரது ஒரே மகள் மட்டும் தனித்து விடப்படுகிறாள் அவளை குரங்குகள் வளர்க்கின்றன.
பல வருடங்களுக்குப் பிறகு காணாமல் போன ஷீலாவைத் தேடி ஒரு குரூப் காட்டுக்குள் செல்கிறது. ஆனால் அந்த குரூப்பின் நோக்கம் ஷீலாவை கண்டுபிடிப்பதல்ல வேறு ஒரு நோக்கம் இருக்கிறது அது என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் கன்னடத்திலும் வெளியானது.