'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை கவுரி கிஷன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதால் கவுரி கிஷனுக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. கவுரி கிஷன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் மகள் சுஸ்மிதா கோனிடேலா தயாரிக்கும் படத்தில் கவுரி கிஷன் மற்றும் சந்தோஷ் சோபன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் .
இந்நிலையில் கவுரி கிஷனிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய அடுத்த தமிழ் படம் எது என கேட்டதற்கு, கவுரி கிஷன்.. விரைவில் ஜி வி பிரகாசுடன் நடிக்க இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதில் அளித்துள்ளார்.