ரஜினி படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' |

ரஜினி கிஷன், மலையாள நடிகை திவிகா நடிக்கும் படம் ரஜினி கேங். படத்துக்கு ஏன் இந்த தலைப்பு. ஹீரோ உண்மயைான பெயர் ரஜினி கிஷனா என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி. இவர் கூறுகையில், ‛‛காமெடி, ஹாரர், எமோசன் நிறைந்த படம் ரஜினிகேங். இந்த படத்துக்கு என்ன டைட்டில் வைப்பது என நிறைய விவாதித்தோம். அப்போது ஹீரோ கிஷன் தனது பெயரை ரஜினி கிஷன் என மாற்றினார். அதனால் அவர் கதாபாத்திரத்திற்கும் ரஜினி எனப் பெயர் வைத்தோம். கதைப்படி, அவரின் பயணமும் அவருக்கு உதவும் கேங்கும் தான் இந்தக்கதை, அதனால் ரஜினி கேங் என வைத்திவிட்டோம்.
ரஜினி என்றாலே பவர் என்பதால் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. நிறைய ஹீரோயின் தேடி கடைசியாக திவிகா வந்தார். மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த் என எல்லா நடிகர்களும் எல்லோரும் இரவு பகல் பாராமல் நடித்து தந்தார்கள் என்றார்.
பேய் பிடித்த ஹீரோயின் என்ன செய்கிறார். அவர் மீது வரும் பெண் பேய் யார்? நண்பர்கள் சேர்ந்து அந்த பேயை எப்படி துரத்துகிறார்கள் என்ற ரீதியில் கதை நகர்கிறதாம். இதில் பெண் வேடத்தில் சில காட்சிகளில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.