'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள 'ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்' என்கிற படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்தும் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப்படத்தில் அவருடன் சிம்ரன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த ட்ரெய்லரை பார்த்துவிட்டேன்.. அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ஜீனியஸ்” என அதில் கூறியுள்ளார்.
ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு, தனது வேலையை இழந்ததுடன் சிறைவாசத்தையும் சந்தித்தவர் தான் நம்பி நாராயணன். பின்னர் அந்த வழக்கில் நிரபாரதி என நிரூபிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.