100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் | என் பெயரை பயன்படுத்த விரும்பாத தம்பி ; பிரியா வாரியர் வருத்தம் கலந்த பெருமிதம் | பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | தனுசுக்கு பொங்கியது ஏன்? அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? | பேண்டசி படத்தில் தர்ஷன் | தமிழுக்கு வரும் கன்னட நடிகை சான்யா | 30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி |
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'மிராய்'. கடவுள் இல்லை என்று சொல்லும் வில்லனை எதிர்த்து கடவுள் பக்தி கொண்ட நாயகன் தெய்வீக சக்தியால் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஆன்மிகத்தின் சக்தியை உணர்த்தும் படமாக வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
படத்தில் இடம் பெற்றுள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. பிரம்மாண்ட கழுகு, சண்டைக் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி ஆகியவை ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கின்றன என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். 400, 500 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்களில் கூட அவ்வளவு தரமான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றதில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் 60 கோடிதான் என்கிறார்கள்.
படத்தில் நடித்த நாயகன், வில்லன் ஆகியோருக்கு 5 கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் தந்துள்ளார்களாம். மொத்தமாக 10 கோடி சம்பளம், தயாரிப்பு செலவு 50 கோடி என உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் எப்படியும் 200 கோடி வசூலைக் கடக்கும் என்று சொல்கிறார்கள்.
தேஜா சஜ்ஜா இதற்கு முன்பு நாயகனாக நடித்த 'ஹனுமான்' படம் 300 கோடி வசூலைப் பெற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.