முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரிஷ்மா சர்மா. பியார் கா புன்ஜென்மா, ஹோட்டல் மிலன், சூப்பர் 30, ஏக் வில்லன் ரிட்டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு மும்பை புறநகர் பகுதியில் நடந்து வருகிறது. காரில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாகிவிடும் என்பதால் தனது உதவியாளர்களுடன் புறநகர் ரயிலில் செல்ல முடிவு செய்து உதவியாளர்களுடன் சென்றார்.
அப்போது ரயில் கிளம்பியதால் அவசர அவசரமாக கரிஷ்மா ரயிலில் ஏறிவிட்டார். ஆனால் அவரது உதவியாளர்கள் ஏறவில்லை. இதனால் பதட்டம் அடைந்த கரிஷ்மா ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். இதில் நிலைதடுமாறி விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.