காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா | கூலி முதல் மீஷா வரை இந்த வார ஓடிடி ரலீஸ்...! |
பிரபலங்களின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவர்களிடம் ஒப்புதல் பெறாமல், விளம்பரம் செய்வது சட்டப்பூர்வமாக குற்றமாகும்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது அனுமதியின்றி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஏஐ புகைப்படங்கள் பல்வேறு வலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, வணிக ரீதியில் சில நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, ''கூகுள் நிறுவனத்திடம் சம்பந்தப்பட்ட லிங்குகளை அகற்றச் சொல்லலாம். அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்திய வலைதளங்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பகிர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், அபிஷேக் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நேற்று, (செப்.,9) பாலிவுட் நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய், இதே கோரிக்கையுடன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த வழக்கும் இதே ஜனவரி 15ம் தேதியில் விசாரணைக்கு வருகிறது.