மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
பாலிவுட் நடிகர் அமீர்கான் மகன் ஜூனைத் கான் உடன் இணைந்து சாய் பல்லவி தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'லால் சிங் சத்தா' படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த சுனில் பாண்டே இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அமீர் கான் மற்றும் மன்சூர் கான் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு 'ஏக் தீன்' என தலைப்பு வைத்திருந்தனர். தற்போது இந்த படத்திற்கு 'மேரே ரஹோ' என புதிய தலைப்பை மாற்றி வைத்துள்ளனர். இதே போல் இப்படம் இவ்வருடம் நவம்பர் 7ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர முதலில் திட்டமிட்டிருந்தனர். இப்போது இந்த பட பணியில் ஏற்பட்ட தாமதத்தினால் வருகின்ற டிசம்பர் 12ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.