பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

ரஜினிகாந்த் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த 'கூலி' படத்தில் ஹிந்தி நடிகர் ஆமிர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்து இருவேறு விதமான கருத்துக்கள் நிலவியது. அப்படத்தில் நடித்தது குறித்து அமீர்கான் கவலைப்பட்டுப் பேசியதாக பொய்ச் செய்திகள் வெளிவந்தன. அதன்பின் அமீர் தரப்பிலிருந்து அப்படி எதுவும் பேசவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.
இதனிடையே, ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், 'கூலி' படத்தில் ரஜினி திருப்தியடையவில்லை அதனால், லோகேஷ் இயக்க மாட்டார் என்றும் செய்திகள் வந்தன.
தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என கடந்த வாரம் தகவல் வெளியானது. அதனால், அமீர் - லோகேஷ் படம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமீர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அனேகமாக அமீர் படத்தை முடித்த பிறகே அல்லு அர்ஜுன் படத்தை இயக்க லோகேஷ் போவார் என்கிறார்கள்.