பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
நடிகை சம்யுக்தா மலையாள படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கில் 'டெவில், பீம்லா நாயக், விருபாக்ஷா' ஆகிய படங்களின் மூலம் பிஸியான நடிகையாக மாறினார். மேலும், தனுஷின் 'வாத்தி' படத்தில் நடித்தது மூலம் சம்யுக்தா தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மூலம் பிரபலமான நடிகையானார்.
இவர் நடிப்பில் கடைசியாக படம் திரைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. இதனால் இவர் கைவசம் படங்கள் இல்லை என பலரும் பேசி வருகின்றனர்.
ஆனால், சம்யுக்தா கைவசம் சுமார் 8 படங்கள் உள்ளது. அதன்படி, தெலுங்கில் 'அகண்டா 2', பூரி ஜெகநாத் விஜய் சேதுபதி படம், 'நாரி நாரி நாடுமா முராரி, ஹைந்தவா, சுயம்பு' மற்றும் முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் போன்ற படங்கள் தெலுங்கில் கைவசமாக வைத்துள்ளார் சம்யுக்தா.
இவை அல்லாமல் ஹிந்தியில் 'மஹாராக்னி' மற்றும் தமிழில் 'பென்ஸ்' என சம்யுக்தா கைவசமாக உறுதிபடுத்தபட்ட 8 படங்கள் உள்ளன. இன்னும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.