முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அசுரன், விடுதலை 2, வாத்தி' ஆகிய படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
சமீபத்தில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது என தகவல் வெளியானது.
இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகும் ஒரு ஜாலியான படம் என்கிறார்கள். கென் இயக்கி, நடிக்கவுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீ தேவி அப்பலா, அனிஸ்மா, பிரியன்ஷி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், சுராஜ் வென்ஜரமூடு, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு 'காதலன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே தலைப்பில் படம் வெளியாகியுள்ளதால் இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால் தலைப்பில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.