ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் | பிளாஷ்பேக்: பாண்டியராஜனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் படுத்துக் கிடந்த கொல்லங்குடி கருப்பாயி | மகளின் விழாவில் குடும்பத்துடன் நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ் | நான் இன்னமும் என்னை ஒரு நடிகராகவே கருதுகிறேன் : அமீர்கான் | வளர்ந்து வரும் நடிகர் சங்கக் கட்டுமானம்: வீடியோ வெளியீடு | 'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து | 'வட சென்னை' முன்பகுதி கதையில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணி? | ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு | மார்கோ 2 கைவிடப்பட்டது : உன்னி முகுந்தன் | வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இசை அமைக்கும் படங்களை விட ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் அதிகம். அது போலவே கவுதம் மேனன் இயக்கும் படங்களை விட அவர் முக்கிய ரோல்களில் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இந்த இருவரும் இணைந்து புதுக் கூட்டணி அமைத்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து நடிக்கும் இப்படத்தில் கவுதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். வி கிரேஷன்ஸ் உடன் இணைந்து டி.ஜி பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‛செல்பி' என பெயரிட்டுள்ளனர். இன்ஜினியரிங் கல்லூரி பின்னணியை கொண்ட கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்.