இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மலையாள திரையுலகிலிருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா மேனன். கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் பாடமாக வெளியான வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததுடன் அந்த படத்தில் ஹிட்டான அடியாத்தி இது என்ன பீலு என்கிற ஒரே பாடலில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். அதேசமயம் அவருக்கு மலையாளம், தமிழை விட தெலுங்கில் தான் அதிக பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் தற்போது தொடர்ந்து தெலுங்கில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா.
இந்த நிலையில் நடிகர் ராணா டகுபதி தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சம்யுதா. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரானா கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்த படத்தை யோகேஷ் கேஎம்சி என்பவர் இயக்குகிறார்.
இந்த படம் குறித்து சம்யுக்தா கூறும்போது, “நான் மற்ற படங்களில் பிஸியாக நடித்து வந்தபோது இந்த கதையை கூட கேட்பதற்கு நேரமில்லாமல் இருந்தேன். ஆனாலும் நான் தான் நடிக்க வேண்டும் என பொறுமையாக காத்திருந்த இயக்குனர் யோகேஷ் என்னிடம் கதையை கூறிய போது நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனேன். குறிப்பாக இது கதாநாயகியை மையப்படுத்திய படமாக இருக்கும், இப்படி ஒரு கதையை நான் தேடி வந்த நிலையில் தான் இந்த கதையாக என்னை தேடி வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படத்தில் நடிகர் ராணாவின் மனைவி கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.