'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
முழுக்க முழுக்க டிரம்ஸ் இசை கலைஞர்களை கொண்ட இசை விழா வருகிற 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதனை இளம் இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைத்து நடத்துகிறார். 'சென்னை டிரம்ஸ் பீஸ்ட் 2024' என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து லிடியன் நாதஸ்வரம் கூறும்போது “இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார். ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜ், இளை போன்றோரும் பங்கேற்க இருக்கிறார்கள். விழாவில் 32 கிராமி விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த இசை விழாவில் பல்வேறு பிரமுகர்கள் வருகை தர இருக்கிறார்கள்” என்றார்.
லிடியன் நாதஸ்வரம், தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடித்து இயக்கும் 'பரோஸ்' படத்திற்கு இசை அமைத்துள்ளார். இது ஒரு 3டி படமாகும். ஐந்து மொழிகளில் திரைக்கு வருகிறது.