குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் | முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! |
நடன மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'கிஸ்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ராணி நடிக்க, பிரபு, தேவயானி, யுடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. லிப் லாக் கொடுப்பதை வைத்தே காதலர்களின் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்ற கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி கதை சொல்லியாக தன்னுடைய குரலை கொடுத்திருக்கிறார். இந்த தகவலை கிஸ் படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்திருக்கிறது.