பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், ஷபீர், பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் 'மதராஸி'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் கடந்த 9 நாட்களில் 88 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதேபோல், மலையாளத்தில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்து கடந்த ஆகஸ்டு 28ம் தேதி திரைக்கு வந்த படம் 'லோகா சாப்டர்-1'. இந்த படத்தை மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வரும் இந்த படம் திரைக்கு வந்து 17 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 235 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.