'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

தமிழ் சினிமாவில் கடந்த ஓரிரு வருடங்களில் ரீரிலீஸ் படங்கள் என்பது ஒரு டிரெண்ட் ஆகி மாறிவிட்டது. இந்தக் கால இளைஞர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் வெளியான சில முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த ரீ ரிலீஸ் படங்களில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்து 2004ம் ஆண்டு வெளிவந்த 'கில்லி' திரைப்படம், கடந்த வருடம் 2024ல் ரீரிலீஸ் ஆனது. முதல் நாளில் சுமார் 8 கோடி வசூலித்த படம் ஓடிய நாட்கள் வரையில் 30 கோடி வரை வசூலித்தது. ரீரிலீஸ் படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக அந்த வசூல் அமைந்தது.
ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' உள்ளிட்ட படங்கள் இதற்கு முன்பு ரிரிலீஸ் ஆனாலும், பெரிய வசூலைக் குவிக்கவில்லை. அவற்றிற்கான புரமோஷன்களும் அதிக அளவில் இல்லை. கடந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டும், அவரது 50 வருட திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையில் 'படையப்பா' படத்தை ரீரிலீஸ் செய்தனர். அதற்காக ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டார்கள். முதல் நாளில் பல தியேட்டர்களில் ஹவுஸ்புஸ் காட்சிகளாக ஓடியது.
இருந்தாலும் முதல் வார இறுதியில் ரஜினிகாந்தின் முந்தைய ரீரிலீஸ் படங்களை விடவும் அதிக வசூலைப் பெற்று 14 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் இறுதி வரை இப்படம் தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது. அப்படி ஓடி விஜய்யின் 'கில்லி' படத்தின் ரீரிலீஸ் வசூலான 30 கோடியைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.