தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி. நடிப்பின் மீதுள்ள ஆசையில் வாய்ப்பு தேடியதில் 'நால்வர்' என்ற படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அவர் தனது தயாரிப்பில் நடிக்க வைக்க விரும்பினார்.
இதனால் கோயம்புத்தூரில் இருந்த அவரை சென்னைக்கு வரவழைத்து மாத சம்பளத்தில் ஏவிஎம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து, அங்கேயே நடிப்பு, நடனம் கற்றுக் கொடுத்தார். போதிய பயிற்சி பெற்றதும் அவர் நடித்த படம் 'குலதெய்வம்'.
இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் சென்னைக்கு புதிது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அப்போது அவருக்கு உதவியவர் அவருடன் நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், இறுதி சடங்கை அவரே முன்னின்று நடத்தினார்.
தாய் இறந்த துக்கத்தை மனதில் தாங்கிக் கொண்டே படத்தில் நடித்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் தாயின் பிரிவில் இருந்து அவரால் மீள முடியவில்லை. தொடர்ந்து நடிக்கவும் அவர் தயங்கினார்.
அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அவருக்கு ஆறுதல் சொல்லி, தைரியமூட்டி மீண்டும் நடிக்க தயார் செய்தார். அவரின் இந்த அன்பே அவர் மீது காதலை உண்டாக்கியது. எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஒரு நாள் 'நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் சம்மதமா' என்று கேட்டார்.
பின்னர் எந்த விழாவும் இல்லாமல் வீட்டிலேயே அமைதியான முறையில் திருமண நிகழ்வை நடத்தி எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மனைவி ஆனார் விஜயகுமாரி. ஒரு படத்திலேயே ஒரு மரணம், ஒரு காதல், ஒரு திருமணத்தை சந்தித்தார் விஜயகுமாரி.