விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக அறிமுகமாகும் பலருக்கும் ரஜினிகாந்த்தை நடிக்க வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
காலத்திற்கேற்ப டிரென்டிங்கில் இருப்பவர்களுடன் பணிபுரிவதை வழக்கமாக வைத்திருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய படங்களின் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள், இதர கலைஞர்கள் ஆகியோரைப் பற்றி கடந்த 50 வருடங்களில் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.
ரஜினிகாந்த்தின் 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இன்றைய இளம் முன்னணி இயக்குனர்கள் சிலரது பெயர் இந்தப் படத்திற்காக அடிபட்டது. ஆனால், திடீரென சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பே ரஜினிகாந்த்தை சந்தித்து கதை சொன்னவர் சிபி. ஆனால், அப்போது அந்தக் கதை பிடிக்கவில்லை என்று ரஜினி நடிக்க மறுத்துவிட்டார் என்றார்கள். 'டான்' படத்தில் இயக்குனராக அறிமுகமான கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தனது இரண்டாவது படத்தை இயக்காமல் இருக்கிறார்.
தெலுங்கில் நானி, தமிழில் சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் அடுத்த படம் பற்றி பேசியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் தான் அவரது இரண்டாவது படம் ஆரம்பமாகும் என்பது ஏறக்குறைய உறுதியாக இருந்தது. ஆனால், திடீரென சிபியை வரச் சொல்லி ரஜினி, கமல் இருவரும் கதை கேட்டு ஓகே சொன்னதாகச் சொல்கிறார்கள்.
தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் ஒரு அதிர்ஷ்டம் சிபிக்குக் கிடைத்துள்ளது.