மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் தனுஷ் பேசியது, ''இட்லி கடை படத்தின் ஹீரோ இட்லி கடை தான். அதனால் இந்த தலைப்பு. இந்த தலைப்பு எப்படி வந்தது என காரணம் சொல்கிறேன். நான் தனியாக இருக்கும் போது எனக்கு இளையராஜா தான் துணை. அப்படி இருக்கும்போது ஒருமுறை ஏரிகரை ஓரத்துல பாடலை கேட்டேன். என் சின்ன வயசில் பாட்டி வீட்டுக்கு அம்மா சம்மர் லொகேசனுக்கு கூட்டிகிட்டு போனது நினைவு வந்தது. அந்த ஊரில் ஒரு இட்லி கடை இருந்தது. அதை சாப்பிட ஆசைப்படுவோம். அதற்காக நான், என் அக்கா, என் உறவினர்கள் பூப்பறிக்கிற வேலை செய்வோம். அதிகாலையில் சில மணி நேரம் பூப்பறித்து இரண்டரை ரூபாய் சம்பாதிப்போம். அப்படியே பம்பு செட் போய் குளித்துவிட்டு, அந்த பணத்தில் இட்லி கடைக்கு போய் இட்லி வாங்கி சாப்பிடுவோம்.
நான் எத்ததனையோ நாடுகளில், எத்தனையோ ஓட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். எங்கள் ஊரில் உழைத்து காசு வாங்கி இட்லி வாங்கி சாப்பிட்ட அந்த ருசி, திருப்தி எங்கேயும் கிடைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், நான் பார்த்த சில கேரக்டரை வைத்து இந்த படம் எடுத்தேன். நம் முன்னோர்கள்தான் நம் மூச்சு காற்று, நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்தது குல தெய்வம். அதை மறக்க கூடாது. இதுவரை குல தெய்வம் கோயிலுக்கு போகாதவர்கள், இனி போங்க. நம் முந்தைய குடும்ப வாழ்க்கை, வேர்களை, நாம் வந்த வழிகளை நம் குழந்தைகளுக்கு எடுத்த சொல்லி குல தெய்வம் அருளை பெறுங்க. நாம் வந்த வழியை மறக்காதீங்க.
ஒரு சிலருக்கு தாத்தா, பாட்டி மட்டுமல்ல, அவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் பெயர்கள் தெரிந்து இருக்கும். பலருக்கு தெரிந்து இருக்காது. நம் குடும்பத்தை வந்த வழியை எங்கே இருந்தாலும் மறக்காதீங்க. இட்லி கடை படப்பிடிப்பு தேனி அருகே உள்ள சொந்த ஊரில் நடந்தது. நான் விளையாடிய தெருக்கள், எங்கள் கருப்பசாமி கோயிலில், எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். என் அம்மாவோட அம்மா, அதாவது பாட்டி கூட இதுல நடிச்சு இருக்காங்க'' என்றார்.