செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலிடத்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் |
சென்னையில் நடந்த ‛இட்லி கடை' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனுஷ் சம்மதத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க, நான் தயாரிக்க ‛வட சென்னை 2' படம் உருவாகிறது என்றார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க வட சென்னை பின்னணியில் ஒரு படம் உருவாகிறது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
உண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் கை விடப்பட்டதா? அல்லது அது வேறு கதையா? வட சென்னை 2 என்பதற்கு பதிலாக, அந்த படத்தின் தொடர்ச்சி, கேரக்டர் நீட்சியாக வேறு பெயரில் வருகிறதா ? அல்லது பைனான்ஸ் பிரச்னை, வடசென்னை உரிமை காரணமாக அந்த படம் வராதா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
ஐசரி கணேஷ் பேசினாலும், கடைசியில் பேசிய சிம்பு வடசென்னை 2 குறித்து எதுவும் பேசவில்லை. பார்வையாளர்கள் வட சென்னை 2 குறித்து அப்டேட் கேட்டாலும் அவர் எதுவும் சொல்லவில்லை. ஆகவே, வடசென்னை 2 பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிம்பு, வெற்றிமாறன், தனுஷ் விளக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது.