பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சத்துடன் கூடிய 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்த படத்தில் கதாநாயகனாக 'பிரேமலு' புகழ் நடிகர் நஸ்லேன் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் சமமாக இன்னொரு முக்கியமான வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் சாண்டி நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். அவரது முதல் படமே கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்திருப்பதும் அவரது கதாபாத்திரத்திற்கு மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதும் அவரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் சாண்டி கூறும்போது, “இந்த படத்தில என்னுடைய கதாபாத்திரம் நிஜமான ஒரு சைக்கோ போன்றது தான். இந்த படப்பிடிப்பில் நடிக்கும்போதெல்லாம் எனது வீட்டிற்கு செல்வதையே தவிர்த்தேன். வீட்டாருடன் போனில் பேசுவதைக் கூட தவிர்த்தேன். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் என்னை தொந்தரவு செய்தது. இதற்கு முன்பு லியோ படத்தில் நடித்தபோதும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்பதால் அப்போதும் இதேபோல தான் வீட்டிற்கு செல்லாமல் வீட்டாருடன் பேசாமல் அந்த படப்பிடிப்பில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.