ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
இனிகோ பிரபாகரன், வேதிகா, சாந்தினி, மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு நடிப்பில், கடந்த வெள்ளி கிழமை வெளியாக இருந்த படம் கஜானா. காட்டில் இருக்கும் புதையலை தேடி செல்லும் குழுவை பற்றி விறுவிறு கதை. யாளி, பாம்பு, புலி, யானை என ஏகப்பட்ட மிருகங்களை கிராபிக்சில் கொண்டு வந்து இருந்தார்கள். அந்தவகைக்கு மட்டும் நிறைய செலவு செய்தார் இயக்குனர், தயாரிப்பாளரான பிரபதீஷ் சாம்ஸ். மே 9ம் தேதி படம் ரிலீஸ். ஆனால், படத்துக்கு 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தநிலையில், படத்தின் ரிலீசை படக்குழு ஒத்தி வைத்துவிட்டது.
தமிழ், தமிழர்கள் என பேசுபவர்கள் இந்த படத்துக்கு உதவி செய்யவில்லை. தமிழகத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு தரமான கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி இந்த படத்தை தயாரித்தோம். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்துக்கு போதுமான தியேட்டர் கிடைக்காதது, போர் சூழல் காரணமாக பட ரிலீசை தள்ளி வை க்கிறோம்' என படக்குழு அறிவித்துவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை காட்சியுடன் கஜானா தள்ளி வைக்கப்பட்டது, படக்குழுவை கவலையடைய வைத்துள்ளது. போர் சூழல், சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் போன்ற காரணங்களால் கடந்த வாரம் வெளியான 9 படங்களில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. சில படங்கள் வந்ததே மக்களுக்கு தெரியவில்லை.