'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த படங்களும் வரவேற்பு பெறுவதுடன் வியாபார ரீதியாகவும் வெற்றியை பெற்று வருகின்றன. தற்போது ஜோரா கைய தட்டுங்க என்கிற படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் யோகிபாபு. இந்த படத்தை வினீஸ் மில்லேனியம் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் ஒரு மேஜிக் கலை நிபுணர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு. இதற்காக பிரபல மேஜிக் கலைஞர் ஒருவரிடம் பல நாட்கள் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் யோகிபாபு. ஒரு காலத்தில் மேஜிக் கலை நிபுணராக புகழ்பெற்ற தனது தந்தையைப் போலவே தானும் மாற வேண்டும் என நினைக்கும் மகன் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் அவை அவருக்கு கை கொடுத்ததா என்பதையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாம்.