'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மங்காத்தா, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகை ராய் லட்சுமி. சமீபகாலமாக தமிழில் லெஜன்ட், ஹிந்தியில் வெளியான போலா ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள டிஎன்ஏ என்கிற படத்தில் கதாநாயகியாக, உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு இவர் மலையாளத்தில் நடிக்கும் படம் இது. இந்த படத்தை டிஎஸ் சுரேஷ் பாபு என்பவர் இயக்கியுள்ளார். கடந்த 2021ல் கன்னடத்தில் வெளியான ஜான்சி ஐபிஎஸ் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ராய் லட்சுமி மீண்டும் இந்த படத்திற்காக காக்கி யூனிபார்ம் அணிந்துள்ளார். இந்த நிலையில் வரும் ஜூன் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.