இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? | நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? |
மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் படமும் 200 கோடியை தொட்டு அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் தொடரும் தமிழிலும் டப்பாகி 70க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
தனது அம்பாசிடர் காரை காதலிக்கிறார் மோகன்லால். 2 போலீசார் அந்த காரிலேயே மோகன்லாலுக்கு தெரியாமல், அவர் மகன் பிணத்தை ஏற்றி புதைக்கிறார்கள். விஷயமறிந்த அப்பா என்ன செய்தார். மகன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது கதை. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் சினிமா பைட்டராக மோகன்லால் வேலை செய்வதா கதை நகர்கிறது. அவர் மாஸ்டர் பாரதிராஜா. படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டராக போட்டோவில் காண்பிக்கப்படுகிறார். ஆனால் நடிக்கவில்லை.