2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட தாதா சாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு இயக்குனர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி ஆகியோருக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் தாதா சாகேப் பால்கே படம் உருவாகிறது என தகவல் வெளியானது. அதேசமயத்தில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து 'தாதா சாகேப் பால்கே' வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்தக் கதையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியும் வெளியானது.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான் இணைந்து தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை படத்தை அக்டோபரில் துவங்குவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் திரைக்கதை அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லையாம். இதனால் இந்த படத்தை கைவிட ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தற்போது ராஜமவுலிக்கு போட்டியில்லாமல் தாதா சாகேப் பால்கே படத்தை உருவாக்க வாய்ப்பு வந்துள்ளது என்கிறார்கள்.