காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பாலிவுட் முன்னணி நடிகர் ஆமீர்கான் நடிப்பில் வரும் ஆக.,11ம் தேதி வெளியாக இருக்கும் படம் லால்சிங் சத்தா. இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஹிந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து பான் இந்தியா படமாக வெளியாகிறது. தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிடுகிறார். சமீபத்தில் இந்த படத்தை நாகார்ஜுனா உள்ளிட்ட சில தெலுங்கு பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டினார் சிரஞ்சீவி. இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மீடியாக்கள் மும்பாக சிரஞ்சீவி, ஆமீர்கான் இருவருக்குமான கேள்வி பதில் பகுதியும் இடம் பெற்றது. இதில் ஆமீர்கானிடம் எப்போது தெலுங்கு படங்களில் நடிக்க போகிறீர்கள் என சிரஞ்சீவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆமிர்கான் தெலுங்கு படங்களில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாகவும், அதேசமயம் சிரஞ்சீவி தற்போது மலையாள லூசிபர் ரீமேக் நடித்துவரும் காட்பாதர் படத்தில் தன்னை அழைப்பதற்கு பதிலாக சல்மான்கானை அழைத்து நடிக்க வைப்பது ஏன் என்றும் பதிலுக்கு சிரஞ்சீவியிடம் ஒரு கேள்வியை வைத்தார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, அந்த படத்திற்கு சல்மான்கான் போன்ற கட்டுமஸ்தான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நடிகர் தான் தேவைப்பட்டாரே தவிர, ஆமீர்கான் போன்ற நடிப்புக்கும் மூளைக்கு வேலையும் கொடுக்கும் நடிகர் தேவைப்படவில்லை. அதனால் தான் உங்களை அழைக்கவில்லை என்று ஆமீர்கானுக்கு ஜாலியான விளக்கம் அளித்தார்.