2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

புத்தாண்டு பிறந்துவிட்டது, அதுபோல் இந்த வாரமும் ஓடிடியில் புதிய படங்களும் வெளிவரவுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கும்கி-2
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கும்கி. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய படம் 'கும்கி-2'.புதுமுக நடிகர் மதி கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வரும் ஜன.3ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
டிராகுலா
லூக் பெசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'டிராகுலா. ஹாரர் திரைப்படமான இதில் கேலப் லாண்ட்ரி ஜோன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை(ஜன.2ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
எல்பிடபுள்யூ
விக்ராந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வெப் தொடர் ' எல்பிடபுள்யூ'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் இன்று ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.
மெளக்லி
இயக்குநர் சந்தீப் ராஜ் இயக்கத்தில், நடிகர் ரோசன் கனகாலா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'மெளக்லி'. இந்த திரைப்படம் இன்று(ஜன.1ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்
உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட வெப் தொடர் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இந்த தொடரின் கடைசி எபிசோட் நாளை(ஜன.2ம்தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இத்திரி நேரம்
மலையாள இயக்குநர் பிரசாந்த் விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ' இத்திரி நேரம்'. இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எகோ
நடிகர் சந்தீப் பிரதீப் நடிப்பிலும், தின்ஜீத் அய்யதன் இயக்கத்திலும் வெளிவந்த மலையாள திரைப்படம் ' எகோ'. த்ரில்லர் அம்சம் கொண்ட இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹக்
நடிகை யாமி கவுதம், நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஹக்' ரொமான்டிக் திரைப்படமான இந்த படம் நாளை(ஜன.2ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.