மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த் படித்தபோது அங்கே நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுக்கின்ற வாத்தியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்ற கோபாலி இன்று (நவ.,17) காலை இயற்கை எய்தினார்.
ரஜினிகாந்த் மீது அவருக்கு அளவில்லாத அன்பு இருந்தது. அதன் காரணமாகத்தான் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்தபோது அவரிடம் ரஜினிகாந்தை மிகச் சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.
கோபாலி அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருப்பவர் ரஜினி. இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் பணியாற்றிய கோபாலி, எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதி இருக்கிறார். நடிகர்கள் போஸ் வெங்கட், நரேன் உட்பட பலருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுத்துள்ளார்.