கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் இணையும் படம் குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வருகின்றன. லேட்டஸ்ட்டாக சுந்தர். சி இயக்கும் அந்த படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ரஜினி, சுந்தர்.சி இணைந்த அருணாசலம் படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் அவர் இசையமைக்க வாய்ப்பில்லை.
கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் படத்துக்கு அவர் உறவினரான அனிருத் இசையமைக்கிறார். சுந்தர்.சியின் படங்களுக்கு அவர் நண்பரான ஹிப்ஹாப் ஆதி அதிகமாக இசையமைத்து இருந்தார். அரண்மனை 4, மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் அவரே இசையமைப்பாளர். ஆகவே, இருவரில் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை இவர்கள் இல்லாமல் சாய் அபயங்கர் மாதிரியான புதியவரை படக்குழு தேர்ந்தெடுக்குமா? அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளரா என்றும் கேள்வி கேட்கப்படுகிறது. பொதுவாக, தன் படங்களில் டெக்னீஷியன் விஷயத்தில் ரஜினி அதிகம் தலையிடுவது இல்லை. அது இயக்குனர் சாய்ஸ் என ஒதுங்கிவிடுவார். ஒருவேளை அனிருத்துக்காக அவர் சிபாரிசு செய்தால் சுந்தர்.சி அதை மறுக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.