விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிவிட்டார். இந்த விலகலுக்கு பணப்பிரச்னைதான் காரணம் எனக் கூறப்பட்டது. சுந்தர்.சியின் சம்பளத்தை கமல் தரப்பு ஏற்கவில்லை. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சுந்தர்.சி தயாரிக்க நினைத்தார், அதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்மதிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால், சுந்தர்.சி விலகலுக்கு பணப்பிரச்னை அல்ல, கதை செட்டாகவில்லை. என் ஹீரோ ரஜினிக்கு கதை பிடிக்க வேண்டும் என்று ஓபனாக சொல்லிவிட்டார் கமல். இதனால் சுந்தர்.சி சொன்ன கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இவ்வளவு வெற்றி படங்கள் கொடுத்த சுந்தர்.சி கதை விஷயத்தில் சொதப்புவாரா? அப்படியே சில கதைகள் ரஜினிக்கு பிடிக்காவிட்டாலும், வேறு கதைகளை அவர் தயார் செய்ய மாட்டாரா? சுந்தர்.சி விலகலுக்கு கதை பிரச்னை காரணமா? வேறு பிரச்னையா? இது குறித்து சுந்தர். சி விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் லேட்டஸ்ட்டாக ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இன்னும் சில இயக்குனர்களும் கதையுடன் ரஜினியை அணுகி இருக்கிறார்களாம். வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினியின் 75வது பிறந்தநாளுக்குள் கதை முடிவாகி, அவர் பிறந்தநாளில் அந்த பட அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.