'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி |

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் நாளை ஞாயிற்றுகிழமை தொடங்க உள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் பெற்றபின் பராசக்தி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 1163 தியேட்டர்கள் உள்ளன. இதில் ஜனவரி 9ம் தேதி பெரும்பாலான தியேட்டர்களில் ஜனநாயகன் திரையிடப்பட உள்ளது. மறுநாள் பராசக்தி வெளியாகும்போதும் இந்த எண்ணிக்கை குறையும். ஜனவரி 10ம் தேதி பராசக்தி 500 தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மாற வாய்ப்பு.
தமிழகத்தில் இருக்கும் தியேட்டர்களை இந்த 2 படங்களுமே மொத்தமாக அள்ளிக்கொள்வதால் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகாமல் ஒதுங்கிக்கொண்டன. பொங்கலுக்கு பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப், சிரஞ்சீவின் மனசங்கர் வரபிரசாத் காரு படங்கள் வர உள்ளது. இரண்டுமே தெலுங்கு படங்கள் என்பதால் இந்த படங்களுக்கு சொற்ப தியேட்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு. ஜனநாயகன், பராசக்தி படங்களின் முதல்காட்சி டிக்கெட் விலை எவ்வளவு என்பதே இப்போது பலரின் கேள்வி.




