'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

2026ம் ஆண்டின் ஆரம்பம் தமிழ் சினிமாவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி 9ம் தேதி விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்'படமும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் ஜன., 10ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இதுதான் திரையுலகிலும், சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக உள்ளது.
இந்த பரபரப்பை மேலும் அதிகமாக்கும் விதத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு 'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அதோடு, இன்று மாலை 'பராசக்தி' படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. கூடவே, படத்தின் டிரைலரையும் வெளியிடலாம்.
இந்த இரண்டும் ஒரு பக்கம் போட்டியில் இருக்க மறுபக்கம் 'ரஜினிகாந்த் 173' படத்தின் இயக்குனர் யார் என்பதன் அறிவிப்பையும் இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்கள். கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்க உள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால், அப்போது இயக்குனராக அறிவிக்கப்பட்ட சுந்தர் சி விலகியதை அடுத்து, புதிய இயக்குனர் யார் என்பதை இன்று அறிவிக்க உள்ளார்கள்.
ரஜினி 173, ஜனநாயகன், பராசக்தி, இந்த மூன்று படங்களின் இன்றைய அப்டேட்டில் எந்தப் படம், யார் 'டிரெண்டிங்'கில் இருக்கப் போகிறார்கள் என்பதை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.