‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

காமெடியனாக நடித்து வந்த சூரி இப்போது கதை நாயகனாகவிட்டார். அப்படி அவர் நடித்த விடுதலை, கருடன், மாமன் படங்கள் ஹிட்டாகவே, இப்போது பல படங்களில் கதைநாயனாக நடித்து வருகிறார். அந்த வகையில் மண்டாடி என்ற படத்தில் சில மாதங்களாக நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன் நெருங்கிய உதவியாளரும், ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்பி படத்தை இயக்கியவருமான மதிமாறன் இந்த படத்தை இயக்குகிறார்.
ராமநாதபுரம் கடல் பகுதியில் நடக்கும் பாய்மர படகு போட்டியை களமாக கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 75 கோடி என படக்குழு கூறி வருகிறது. இந்த தொகை கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரிக்கு இதற்கு முன்பு சில படங்கள் வெற்றி பெற்றாலும், 75 கோடி பட்ஜெட் என்பது ரொம்ப அதிகம். விடுதலை, விடுதலை 2 படமெடுத்த எல்ரெட்குமார் மண்டாடியை தயாரிக்கிறார். விடுதலை2 படத்தில் அவருக்கு அதிக லாபம் இல்லை. ஆனாலும், இவ்வளவு ரிஸ்க் எடுத்து படத்தை தயாரிக்க என்ன காரணம்? என்று பலரும் கேட்கிறார்கள்.
ஆரம்பத்தில் இவ்வளவு பட்ஜெட் இல்லை. படகு போட்டி, ஆக் ஷன் காட்சிகள், கூடுதலாக வந்த நடிகர்கள் என பட்ஜெட் அதிகமாகிவிட்டது. இந்த பட்ஜெட்டில் உருவாகும் படம் இன்னும் அதிகமாக வசூல் செய்தால்தான் படம் தப்பிக்க வாய்ப்பு. ஆகவே, இந்த படத்தை சூரியும், படக்குழுவும் பெரிதும் எதிர்பார்க்கின்றன. இன்னும் சில மாதங்களில் படம் ரிலீஸ். இதற்கு பின்னரே சூரி கதைநாயனாக நடிக்கும் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியின் எதிர்காலமும் மண்டாடி படத்தின் வெற்றியில் அடங்கி இருக்கிறது என கூறப்படுகிறது.