சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி | 100 கோடி வசூல் கடந்த 'மிராய்' | கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான் : மேடையில் அறிவித்த கவின் | இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி | பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் |
காமெடி நடிகராக அசத்தி வந்த நடிகர் சூரி, ‛விடுதலை' படத்தின் மூலம் நாயகன் ஆனார். தொடர்ந்து நாயகனாக பயணிக்கும் அவர் விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களிலும் தனது முத்திரையை பதித்தார். தற்போது ‛மாமன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகும் நிலையில் அடுத்து ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'மண்டாடி' என பெயரிட்டுள்ளனர்.
விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க, ‛செல்பி' படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் கடல் சார்ந்த கதையில் இருக்கலாம் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே தெரிகிறது. நாளை(ஏப்., 19) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகிறது.
இப்படம் பற்றி சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛ எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.