தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
நாயகன் படத்திற்கு பின் 37 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛தக் லைப்'. இதில் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜுன் 5ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மேற்சொன்ன படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்
விழாவில் கமல் பேசுகையில், ‛‛உயிரே... உறவே... தமிழே... இதை மட்டும் தமிழில் சொல்கிறேன். இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச போகிறேன். இது அரசியல் அல்ல, இது தமிழனின் எதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை 2000 ஆண்டுகளாக செய்கிறோம்.
5.30 மணிரத்னம்
மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம். அவருக்கும், எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள் தான் நாயகன், தக் லைப் படங்கள். முதல்முறையாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு மணிரத்னம் படம் பண்ணியிருக்கிறார். இந்தப்படம் கண்டிப்பாக ஓடும். காரணம் நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள். அதனால் தான் இவ்வளவு நம்பிக்கை. நான் வெளிநாட்டிற்கு சென்று வந்தால் கூட சினிமாவை பற்றி பேசுவேன். மணிரத்னத்திற்கு நான் வேறு பெயர் வைத்துள்ளேன். அந்த பெயரை கோபத்தல் தான் வைத்தேன். அதை இங்கு சொல்வது தவறு கிடையாது. அவர் மணிரத்னம் கிடையாது. 5.30 மணிரத்னம். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்களே அதுபோல சரியாக அத்தனை மணிக்கு வந்திடுவார்.
அப்பா 8 அடி, பையன் 16 அடி
எனக்கு ஏதாவது பிரச்னை என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது சட்டையை நனைத்து விடுவார் டி ராஜேந்தர். பாசத்துல அப்பா 8 அடினா, சிம்பு 16 அடி. பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது கஷ்டம். இந்த டயலாக் படத்திலும் இருக்கு.
ஐ லவ் யூ சொன்ன ஜோஜு
இந்த மேடையில் உள்ள 2 நாயகிகள் இந்த படத்தில் ஒரு தடவை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ என சொல்லவில்லை. ஆனால் படப்பிடிப்பில் எப்போது பார்த்தாலும் என்னை பார்த்து ஐ லவ் யூ என்று சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான். அதனால் மனதைக் கொஞ்சம் தேற்றிக் கொண்டேன்.
இது எங்க மும்மொழித் திட்டம்
நான், சிம்பு எல்லாம் படித்ததே சினிமாவில் தான். மொழி, கணக்கு எல்லாம் எப்படி படித்தோம் என தெரியவில்லை. சினிமாவால் வளர்ந்தோம். நான் வெளிநாடு போய் வந்தால் கூட சினிமாவை பற்றி தான் பேசுவேன். ஏன் என்றால் அது எனக்கு வியாபாரமும் கூட, என் வாழ்க்கை. எடுத்த சினிமாவையே எடுத்தால் நீங்கள் பார்ப்பீங்களா. நான் தினமும் கத்துக்கிறேன்.மொழிப்போர் நடந்துகிட்டு இருக்குற நேரம். எதுக்கு வம்புனு ரஹ்மான் கொடுத்த ஐடியாவை வைத்து தான் ஜிங்குச்சானு வார்த்தையை இந்த பாடிலில் பயன்படுத்தினோம். இது சீனா, ஜப்பான் மொழியாக கூட இருக்கலாம். அதனால் நாங்கள் இன்னொரு மொழிக்கு போய்விட்டோம். இது எங்களோட மும்மொழித் திட்டம். சீனா மார்க்கெட்டிற்கு போக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது.
இவ்வாறு கமல் பேசினார்.