படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கும் அளவிற்கு கடந்த எட்டு வருடங்களில் வளர்ந்துள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 2017ல் அவர் இயக்குனராக அறிமுகமான 'மாநகரம்' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் ஸ்ரீ.
'வழக்கு எண் 18/9' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அதன்பின் மிஷ்கின் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', மற்றும் 'சோன்பப்டி, வில் அம்பு' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2023ல் வெளிவந்த 'இறுகப்பற்று' படத்திலும் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.
சமீபத்தில் உடல் இளைத்து, நீளமான தலைமுடி வைத்து ஆளே அடையாளம் தெரியாதபடி சில புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி அளித்தார் ஸ்ரீ. அவரது இந்த நிலைக்கு என்ன காரணம் என பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தனது முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்ரீ எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருக்கிறது என்று தகவல்கள் வந்தன. அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர வைத்திருக்கிறார் லோகேஷ் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஸ்ரீ குடும்பத்தினர் சார்பில் அவரே பத்திரிகைச் செய்தியையும் பகிர்ந்துள்ளார் என்கிறார்கள்.