பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிலர் விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்கள்.
நடிகர் சூரியும் விஜய்யை விமர்சனம் செய்தது போன்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சூரி. அதில், 'தம்பி தவறான தகவலை பரப்புவது இந்த சமூகத்துக்கு எப்போதுமே தீமையே தரும். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிதானத்தையும் முதிர்ச்சியும் காட்ட வேண்டும். நல்ல மாற்றங்களை பெறுவதற்கு இந்த சமூகம் தகுதியானது. அதனால் அன்பையும் நன்மையையும் பரப்புவதில் உங்களது சிறந்ததை வெளிப்படுத்துங்கள். அதனால் நம்முடைய பணிகளில் எப்போதும் முழு கவனத்தை செலுத்துவோம்' என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பதிவு போட்டு உள்ளார் நடிகர் சூரி.