நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

திரைப்படங்களில் பகுத்தறிவு பேசுவார், அரசியலில் திராவிட கொள்கை ஏற்பார். ஆனால் அடிப்படையில் விஜயகாந்த் பெரிய பக்திமான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பக்தி திரைப்படங்களில் ஆர்வமுடன் நடித்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது 'வேலுண்டு வினையில்லை'.
ஒரு காலத்தில் பக்தி படங்களால் மக்களை வசியம் செய்த கே.சங்கர் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் இது. இதில் விஜயகாந்துடன் அம்பிகா, நம்பியார், ஜெய் கணேஷ், செந்தில், டெல்லி கணேஷ், வடிவுக்கரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். நம்பியாரின் குடும்பம் ஒரு தீவிர முருக பக்த குடும்பம். அவர்கள் முருகன் வேலை வீட்டில் வைத்து பரம்பரை பரம்பரையாக வணங்கி வருவார்கள். தங்கத்தினாலான அந்த வேல் அன்றைய மதிப்புபடி ஒரு கோடி ரூபாய்.
அதனை வில்லன் ஜெய் கணேஷ் திருடி வெளிநாட்டினருக்கு விற்க முயற்சிப்பார். காணாமல் போன வேலை தேடி போலீஸ் அதிகாரியான விஜயகாந்த் வருவார். அவர் முருக பக்தர் வேடம் அணிந்து கோவிலில் தங்கியிருந்து திருட்டுப்போன வேலை தேடுவார். அந்த வேல் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை. பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படம்.